குஜராத்தில் எலுமிச்சை பழம் விலை கிலோ ரூ.200 ஆக உயர்வு
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வரத்து பற்றாக்குறை மற்றும் சிட்ரஸ் பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக ராஜ்கோட்டில் எலுமிச்சை பழங்களின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
ராஜ்கோட் (குஜராத்): கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வரத்து பற்றாக்குறை மற்றும் சிட்ரஸ் பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக ராஜ்கோட்டில் எலுமிச்சை பழங்களின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
ரூ50 முதல் ரூ.60க்கு விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது கிலோ ரூ.200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எலுமிச்சை பழத்தின் விலை கிலோ ரூ.200-ஐ தொட்டது. முன்பு கிலோ ரூ.50 முதல் ரூ.60-ஆக இருந்தது.
Advertisement
Advertisement
வெப்பநிலை அதிகரிக்கும் போது, மக்கள் தங்கள் உணவில் எலுமிச்சையை சேர்க்க விரும்புகிறார்கள். ஏனெனில் அவை வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. எலுமிச்சை பழம் வரத்து குறைவால் எலுமிச்சை பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
எலுமிச்சை பழம் திடீர் விலை ஏற்றத்தால் குறைந்த அளவிலேயே வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதால், விலை ஏற்றம் வியாபாரிகளையும் பாதித்துள்ளது. விலை உயர்வால் வியாபாரிகள் மற்றும் வாங்குபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.