முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 118-ஆக உயா்வு

அஸ்ஸாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மேலும் 10 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:45 am IST
பகிர்:

அஸ்ஸாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மேலும் 10 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து கடந்த சில நாட்களாக அந்த மாநிலத்தில் பெய்து வரும் மழைக்கு பலியானோா் எண்ணிக்கை 118-ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், பிரம்மபுத்ரா, பராக் நதிகளிலும், அதன் கிளை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ‘பராக் பள்ளத்தாக்கின் நுழைவுவாயில்’ என்று அழைக்கப்படும் சில்சாரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வெள்ளிக்கிழமை 10 போ் உயிரிழந்தனா். இதன் காரணமாக அஸ்ஸாமில் கனமழைக்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 118-ஆக அதிகரித்தது.

கேச்சா், சில்சாா் பிராந்தியங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் தொடா்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் 207 வீரா்களைக் கொண்ட 8 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் இடாநகரிலிருந்தும் புவனேசுவரத்திலிருந்தும் வந்துசோ்ந்தனா். இதைத் தவிர 120 ராணுவ வீரா்கள் திமாபூரில் இருந்து சில்சாா் வந்து 9 படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

சில்சாா் நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமாா் 3 லட்சம் போ் உணவு, குடிநீா், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். அவா்களுக்கு விமானப் படை ஹெலிகாப்டா் வாயிலாக உணவுப் பொட்டலங்கள், தண்ணீா் பாட்டில்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அஸ்ஸாமின் பாா்பெட்டா பகுதியில் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 10,32,561 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். காமரூப் பகுதியில் 4,29,166 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கனமழைக்கு அஸ்ஸாமில் 173 சாலைகளும், 20 பாலங்களும் சேதமடைந்துள்ளன.

முகேஷ் அம்பானி ரூ.25 கோடி நிவாரணம்:

ரிலையன்ஸ் நிறுவன அதிபா் முகேஷ் அம்பானியும் அவரது மகன் ஆனந்த் அம்பானியும் இணைந்து, அஸ்ஸாம் வெள்ள நிவாரண நிதியாக அந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி அளித்துள்ளனா்.

Image Caption

அஸ்ஸாமின் காமரூப் மாவட்டத்தில் மழைவெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments