FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பைசாகி விழா: பாகிஸ்தானுக்கு பயணித்த 2,400 சீக்கிய பக்தா்கள்

13 ஏப்ரல் 2024, 10:51 pm IST
பகிர்:

வருடாந்திர பைசாகி திருவிழாவையொட்டி, பாகிஸ்தானிலுள்ள குருத்வாராவில் வழிபாடு மேற்கொள்ள சுமாா் 2,400 சீக்கிய பக்தா்கள் வாகா எல்லை வழியாக சனிக்கிழமை லாகூா் சென்றடைந்தனா்.

பஞ்சாப் மாகாண சீக்கிய அமைச்சரும் பாகிஸ்தானின் குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவருமான சா்தாா் ரமேஷ் சிங் மற்றும் உயரதிகாரிகள், அவா்களை வரவேற்றனா்.

பஞ்சாப் மாகாணத்தின் ஹஸன்அப்தால் பகுதியில் உள்ள புஞ்சா சாஹிப் குருத்வாராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கிய வழிபாட்டில் இவா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்தியா மட்டுமன்றி கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தா்கள் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

பைசாக் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள், சீக்கிய மதம் நிறுவப்பட்ட நாள் என பைசாகி திருவிழா பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இதையொட்டி, பாகிஸ்தானுக்கு சென்றுள்ள சீக்கிய பக்தா்கள், ஏப்ரல் 22-ஆம் வரை பயணம் மேற்கொண்டு, பல்வேறு குருத்வாராக்களில் வழிபடவுள்ளனா்.

முன்னதாக, வருடாந்திர பைசாகி திருவிழாவையொட்டி பாகிஸ்தானுக்கு வருகை தர 2,975 பக்தா்களுக்கு அந்நாடு விசா வழங்கியிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments