முகப்பு
இந்தியா

நீட் தேர்வில் ஒருதலைப்பட்சம்: அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்த கேரள காங்கிரஸ்!

அனிதாவின் மதிப்பெண் சான்றிதழை கேரள காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

Updated On : 15 ஜூன் 2024, 5:56 pm IST
பகிர்:

98 சதவீதம் பெற்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. ஆனால், 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது எவ்வாறு சாத்தியமானது என்று கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அனிதாவின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இணைத்து கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் மாணவியான அனிதா 12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1176 மதிப்பெண்கள்(98 சதவீதம்) எடுத்தும் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அனிதா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பெண். சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அனிதா, 12ம் வகுப்பு வரை தனது பள்ளியில் எப்போதும் முதலிடத்தில் இருந்தார். 2017 இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், தமிழ்நாட்டில் மருத்துவச் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வந்தது. அவரும் 1176/1200 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.

Advertisement

98 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. ஆனால், 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது எவ்வாறு சாத்தியமானது. நீட் தேர்வு முறைகேடானது.

மேலும், உச்சநீதிமன்றம் அனிதாவின் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் அனிதா ஒரு தியாகி” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.