முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக..

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:56 PM
கணக்கெடுப்பு அதிகாரிகள் தாக்குதல் - DPS
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:08 PM

ஒடிசாவின் தேன்கனால் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தாக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் ஒரு பகுதியாகத் தரவுகளைச் சேகரிக்கச் சென்ற, மூன்று கணக்கெடுப்பாளர்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் அடங்கிய குழுவினர் மீது, காமாக்ஷி நகர் அறிவிக்கப்பட்ட பகுதி மன்றத்தின் மஹிமாநகர் பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளர்கள் நால்வரும், நபர் ஒருவர் அவரது இரண்டு மகன்கள் என மூன்று பேர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தனர்.

Advertisement

காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காமாட்சிநகர் துணைக் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த தாக்குதல் நடத்திய இரண்டு பேரும் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைக் காட்டி, தங்கள் வருகையின் நோக்கத்தையும் தெரிவித்த பிறகும், அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தக் குடும்பத்தினர் தங்களைக் கற்களால் தாக்கினர். முகத்தில் காயங்கள் ஏற்பட்டன, இருசக்கர வாகனமும் சேதமடைந்தது எனப் பாதிக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கூறினார்.

summary

Four Census officials, including two women, were allegedly assaulted in Odisha's Dhenkanal district on Wednesday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.