உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மீரட்-கர்னல் நெடுஞ்சாலையில் ஒரு டஜன் கட்டுகளாகச் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச ரொக்கப் பணத்தை அதன் உரிமையாளரிடம் காவல்துறை ஒப்படைத்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
கபராவுட் கிராமம் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் கிடந்த ரொக்கப் பணம் (ஆறு கட்டுகள் ரூ.500, நான்கு கட்டுகள் ரூ.200 மற்றும் இரண்டு கட்டுகள் ரூ.100) குறித்து அப்பகுதிவாசி ஒருவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலீஸார் அவற்றை மீட்டு போலீஸ் ஆதார அறையில் ஒப்படைத்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுமித் சுக்லா கூறினார்.
Advertisement
இதற்கிடையில், ஹரியாணாவில் உள்ள வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு, இருசக்கர வாகத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பணம் தவறி விழுந்ததாக முசாஃபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷுபம் அந்தப் பணத்திற்கு உரிமை கோரியுள்ளார்.
ஷாம்லி காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், விசாரணையின்போது, பணத்தின் உண்மையான உரிமையாளர் ஷுபம் என்பது கண்டறியப்பட்டதாகவும், சனிக்கிழமை அவரிடம் ரூ. 4 லட்சம் ரொக்கமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை ஹரியாணாவின் கர்னலில் இருந்து புதானாவிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்தப் பணம் சாலையில் விழுந்ததாக அவர் கூறினார். பணம் குறித்து போலீஸுக்கு தகவல் அளித்த சுமித் குமாரின் சிறப்பான பணிக்காக, அவருக்குப் பரிசளிக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
Muzaffarnagar, Police have handed over Rs 4 lakh in cash stacked in a dozen bundles, which was found strewn on the Meerut-Karnal highway in Shamli district, to its owner, officials said on Saturday.