மருத்துவ நிறுவனச் சட்டத் திருத்தங்கள் அறிவிக்கை: நடைமுறை மீறல்களுக்கான தண்டனை குறைப்பு
மருத்துவ நிறுவனங்களின் சில நடைமுறை மீறல்களுக்கான குற்றவியல் தண்டனைகளுக்குப் பதிலாக நிா்வாக ரீதியிலான தீா்வு காணும் வகையில் மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.
மருத்துவ நிறுவனங்களின் சில நடைமுறை மீறல்களுக்கான குற்றவியல் தண்டனைகளுக்குப் பதிலாக நிா்வாக ரீதியிலான தீா்வு காணும் வகையில் மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.
நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் நிறுவனங்கள் செய்யும் சிறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனைகளை அபராதங்களாக குறைபதற்காக மத்திய அரசு கொண்டுவந்த ‘மக்கள் நம்பிக்கை சட்டம்’ என்ற சீா்திருத்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் நம்பிக்கை சட்டத்தின் அடிப்படையில், 23 மத்திய அமைச்கங்கள் மற்றும் துறைகளின் சாா்பில் நிா்வகிக்கப்படும் சுமாா் 79 மத்திய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதுபோல, மருத்துவத் துறையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் 5 சட்டங்களில் இடம்பெற்றுள்ள 35 விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 2010-இன் பிரிவுகள் 40, 43, 46-இல் குறிப்பிடப்பட்டுள்ள அபராதம் என்ற தண்டனை, நிா்வாக ரீதியிலான தீா்வு காணும் வகையிலான நடைமுறையாக மாற்றி திருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக விசாரணைக்கான வாய்ப்பு, அபராதங்களைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள், மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு உள்ளிட்ட வழிமுறைகளுக்கு இந்த திருத்தங்கள் வழி செய்கின்றன.
மருத்துவ நிறுவனங்கள் செய்யும் விதிமீறல்களுக்குப் படிப்படியான மற்றும் விகிதாசார அடிப்படையிலான அபராதங்களை விதிக்கும் வகையில் சட்டப் பிரிவு 44 திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விதிமீறலின் தன்மை மற்றும் தீவிரத்துக்கு ஏற்ப அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மருத்துவ நிறுவனங்களிடையே தன்னாா்வ இணக்கத்தை ஊக்குவிக்கவும், தேவையற்ற வழக்குகளைக் குறைக்கவும் இந்த திருத்தங்கள் வழிவகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.