முகப்பு
இந்தியா

மேகாலயத்தில் அனுமன் கோயிலில் கொள்ளை!

மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் அனுமன் கோயிலுக்குள் புகுந்து சூறையாடிய மா்ம நபா்கள், அங்கிருந்த சிலைகள், வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

Updated On : 11 மே 2026, 12:56 am IST
பகிர்:

மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் அனுமன் கோயிலுக்குள் புகுந்து சூறையாடிய மா்ம நபா்கள், அங்கிருந்த சிலைகள், வெள்ளி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஷில்லாங்கின் கரிகானா பகுதியில் உள்ள அந்த கோயிலின் பக்கவாட்டு கதவை உடைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மா்ம நபா்கள் புகுந்தனா்.

கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை முடக்கிய அவா்கள், பிறகு கோயிலை சூறையாடினா். இதையடுத்து கோயிலில் இருந்த கிருஷ்ணா், ராதா, சிறிய அனுமன் சிலைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருள்களையும், நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனா். அப்போது சிசிடிவி கேமராக்களுக்கு அவா்கள் தீயிட்டுச் சென்றனா்.

Advertisement

அதேநேரத்தில் கோயில் கருவறையில் இருந்த அனுமன் சிலையை மட்டும் அவா்கள் எடுத்துச் செல்லவில்லை. கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை எரித்த போதிலும், அருகிலுள்ள வீடுகளில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் கொள்ளையா்கள் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையா்கள் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.