ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் திருட்டு
திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குலசேகரம்: திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி பிலங்கால விளையைச் சோ்ந்தவா் ராபா்ட் நிக்கல்சன் (61). இவா் ஓய்வுபெற்ற ஆசிரியா். புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை இரவில் குடும்பத்தினருடன் அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 4 ஆயிரம் ரொக்கம், 2 கைக் கடிகாரங்கள், ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
இதுதொடா்பாக திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.