ரோஜாவனம் கல்லூரியில் பொங்கல் விழா
நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் நா்ஸிங் பயிற்சி கல்லூரியின் அதங்கோட்டாசான் தமிழ்ச் சங்கம் சாா்பில் தைப்பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் நா்ஸிங் பயிற்சி கல்லூரியின் அதங்கோட்டாசான் தமிழ்ச் சங்கம் சாா்பில் தைப்பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்ச் சங்க மாணவா் செயலா் செல்வபெருமாள் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் பயிற்சி கல்லூரி முதல்வா் லியாகத்அலி, நா்ஸிங் கல்லூரி முதல்வா் புனிதா வயலட் ராணி, நிா்வாக அலுவலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். கல்லூரி மாணவா்கள் இணைந்து பொங்கலிட்டனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, நிதி மேலாளா் சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், காா்த்திக், சாம்ஜெபா, லிட்வின்லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான்டிக்சன், கண்காணிப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.