முகப்பு
குழந்தைகள் உலகம்

பேல் பூரி

ஹலோ அம்மா... சிலிண்டர் சரியா கிடைக்காததால முதன் முதலா விறகு அடுப்புல சமைக்கக் கத்துக்கிட்டேன்மா...

Updated On : 28 ஜூன் 2026, 12:00 am IST
பகிர்:

கண்டது

(திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'நெருப்பெரிச்சல்.'

Advertisement

Advertisement

-எஸ்.அமுதா, திருவண்ணாமலை.

(ஓசூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'அழகுபாவி.'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

(திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'பால்வார்த்து வென்றான்.'

-எஸ்.உமை, சென்னை-73.

கேட்டது

(சென்னையில் வீடு ஒன்றில் செல்போனில் அம்மாவிடம் பேசும் பெண்)

'ஹலோ அம்மா... சிலிண்டர் சரியா கிடைக்காததால முதன் முதலா விறகு அடுப்புல சமைக்கக் கத்துக்கிட்டேன்மா...'

'குட்! அப்படித்தான் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மாறத் தெரியணும்.'

'எல்லாம் சரிதாம்மா. ஆனா, இந்த விறகு அடுப்பை எப்படி சிம்ல வைக்கிறதுன்னே தெரியலை... கொஞ்சம் சொல்லேன்..!'

-ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்.

(செங்கல்பட்டில் ஷேர் ஆட்டோக்காரரிடம் ஒருவர்)

'ஆட்டோக்காரரே... அந்தக் குடிகாரன் 20 ரூபாய் கொடுக்காமல் போறார்... பேசாம இருக்கீங்களே?'

'அதற்குப் பதிலா அவர் குடிச்ச இரண்டு காலிப்பாட்டில்களை வச்சிட்டுப் போறாரு!'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

(திருச்சியில் ஆட்டோ ஒன்றில் பள்ளிக் குழந்தையும், அவரை ஏற்றிவிட வந்த தாயும்)

'பயப்படாமல் போகணும்... என்ன?'

'டாடியும் ஆபிஸூக்குக் கிளம்பிட்டார். நீ பயப்படாமல் நான் வரும் வரை தைரியமாய் இரு... மம்மி!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

'அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது அன்பு.

அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுகிறது நட்பு.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

மைக்ரோ கதை

கடற்கரையில் சிறுவர்கள் கூடியிருந்தனர்.

ஒரு சிறுவன், 'யார் பெரிய பொய் சொல்கிறாரோ, அவருக்கே இந்த பாப்கார்ன் பரிசு' என்றார்.

அருகில் இருந்த பெரியவர், 'தம்பிகளா உங்க வயசில் நான் ஒரு பொய்கூடச் சொன்னதில்லையே... நீங்களானால் இப்படி?' என்று கூறினார்.

உடனே சிறுவர்கள் ஒரே குரலில், 'அப்படியா இந்தாங்க தாத்தா... உங்களுக்கே இந்தப் பரிசு!' என்று கூறி, பாப்கார்னை பெரியவரிடம் அளித்தனர்.

மன சங்கடத்துடன் பாப்கார்னை வாங்கிக் கொண்டார் அந்த பெரியவர்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

எஸ்.எம்.எஸ்.

'வாழ்க்கையில் பாதி கவலைகள் கற்பனையானவை. மீதி, கடந்து செல்லவேண்டியவை!'

-வி.ரேவதி, தஞ்சை.

அப்படீங்களா!

வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்ல அறிதிறன் பேசிகளையும் பாதிக்கிறது. கடும் வெப்பத்தால் பேட்டரியில் உள்ள சார்ஜ் தானாகவே குறைந்துவிடுவதால், பலர் கைப்பேசியின் பயன்பாடில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

கைப்பேசியில் உள்ள லித்தியம் -ஐயன் பேட்டரிகள் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவை.

வெப்பம் கூடும்போது, திரையின் வெளிச்சம் குறைவதும், செயல்திறன் குறைவதும் இயல்புதான்.

5ஜி சிக்னல் இல்லாத இடத்தில் அந்தச் சேவையை கைப்பேசி தானாகத் தேடிக் கொண்டிருக்கும். இதனால் பேட்டரி தொடர்ந்து குறையும்.

கார்களில் வெயில் படும் இடங்களில் கைப்பேசியை வைப்பது, கடும் வெப்பநிலையில் கேம்கள், விடியோ அழைப்புகள், தொடர் நேரலைகளை நீண்ட நேரம் காண்பது ஆகியவை கைப்பேசியைச் சூடாக்கி, பேட்டரி சேமிப்பை உடனடியாகக் குறைத்துவிடும்.

இதைத் தவிர்க்க புளுடூத், ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ் போன்ற சேவைகளைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றை ஆப் செய்து வைக்கலாம், வெப்பம் குறைவான இடத்தில் வைத்து சார்ஜ் செய்யலாம், ஏர்பிளேன் மோடில் சிறிது நேரம் மாற்றினால், கைப்பேசியின் வெப்பம் குறையும். இதுபோன்ற சிறு செயல்கள் கைப்பேசியின் பேட்டரியை நீண்ட நேரம் சேமிக்க உதவவும், வெப்பத்தால் சூடாகாமல் இருக்கவும் உதவும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments