கரடியின் திமிர்...
கரடி ஒன்று வந்தது காக்கைக் கூட்டை கண்டது
கரடி ஒன்று வந்தது
காக்கைக் கூட்டை கண்டது
கரடி மரத்தில் ஏறியே
Advertisement
Advertisement
கூட்டைப் பிய்த்து எறிந்தது!
-
காகம் அதனைக் கண்டது
கரடியைத் தட்டிக் கேட்டது
காக்கைப் பயலே ஓடிப்போ
கரடி திமிராய்ச் சொன்னது!
-
காக்கை பொறுமை காத்தது
கரைந்தே பறந்து சென்றது
கரடி நடந்து செல்கையில்
குழிக்குள் திடீரென விழுந்தது!
-
அங்கே வந்த காகமும்
அந்தோ பரிதாபம் என்றது
அடுத்த நிமிடம் பறந்தது
ஆனையைக் கூட்டி வந்தது!
-
தும்பிக் கையால் கரடியை
தூக்கியே எடுத்தது யானையும்
கரடியின் திமிர் ஒழிந்தது
காக்கையும் யானையும் மகிழ்ந்தது!
வசீகரன், தேனாம்பேட்டை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.