முகப்பு
கிருஷ்ணகிரி

கருணைத் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

போரில் உயிர் நீத்த படைவீரர்களின் சார்ந்தோர், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் கருணைத் தொகை பெற வருகிற 20-ஆம்

Updated On : 11 மே 2013, 12:32 pm IST
பகிர்:

போரில் உயிர் நீத்த படைவீரர்களின் சார்ந்தோர், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் கருணைத் தொகை பெற வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மு.முத்துராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போரில் உயிர் நீத்த படைவீரர்களின் விதவையர், பெற்றோர் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தமிழக அரசின் கருணைத் தொகை, தொகுப்பு நிதியிலிருந்து கருணைத் தொகை, வருடாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிதியுதவியைப் பெற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி படைத்தவர்கள் இதுவரை பெறாதிருப்பின் தற்போது பெற அனைத்து ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை மார்ச் 31-க்குள் அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் அந்த அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.