முகப்பு
கிருஷ்ணகிரி

குற்றச் சம்பவங்களை தடுக்க கிராம கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

கிருஷ்ணகிரி காவல் உள்கோட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க கிராம கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:51 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி காவல் உள்கோட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க கிராம கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி காவல் உள்கோட்டத்தில் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாலுக்கா, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, மகாராஜகடை ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களுக்கு நியமன ஆணையை வழங்கினாா். இந்த நிகழ்வில் காவல் ஆய்வாளா்கள் பாஸ்கா், ரஜினி, சுரேஷ்குமாா், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.