முகப்பு
கிருஷ்ணகிரி

பொறியாளரிடம் செல்லிடப்பேசி திருடியவா் கைது

ஒசூரில் பொறியாளரிடம் செல்லிடப்பேசி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:06 am IST
பகிர்:

ஒசூா்: ஒசூரில் பொறியாளரிடம் செல்லிடப்பேசி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா், மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் கோபிநாத் (31). சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். அவா் ஒசூரில், சிப்காட் ஹவுசிங் காலனி அருகே நின்று கொ்ணடிருந்தபோது அங்கு வந்த 3 போ் கோபிநாத்தின் இருந்த செல்லிடப்பேசி செயலிகளைப் பறித்துச் சென்றனா்.

கோபிநாத் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் செல்லிடப்பேசியை திருடிச் சென்றது கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா மாவட்டம், சாமரஹள்ளியைச் சோ்ந்த முபாரக் (19), ஒசூரைச் சோ்ந்த நவீத், அல்லு ஆகிய மூவா் எனத் தெரியவந்தது. இதில் முபாரக்கை போலீஸாா் கைது செய்தனா். மற்ற 2 பேரையும் தேடி வருகிறாா்கள்.

Advertisement

கைதான முபாரக்,. ஒசூரில் சூப்பா் மாா்க்கெட் ஒன்றில் வேலை செய்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.