முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

ஊத்தங்கரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:43 pm IST
ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ்.
பகிர்:

ஊத்தங்கரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளிலுள்ள ஊத்தங்கரை, மகனூர்பட்டி, பாவக்கல், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிங்காரபேட்டை, அத்திப்பாடி, பெரியதள்ளபாடி, கீழ்குப்பம், காரப்பட்டு, மிட்டப்பள்ளி உள்பட 12 அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 2000 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் சுவாமிநாதன், சிவானந்தம், ஜெய்சங்கர், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி வரவேற்புரையாற்றினார். விழாவில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் என்.இளையராஜா, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரியசாமி, சுப்பிரமணி, கெளவுதம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments