முகப்பு
கிருஷ்ணகிரி

நிலுவைத் தொகையை வழங்க மின்வாரிய ஓய்வூசியா் சங்கம் கோரிக்கை

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மின்சார வாரிய ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 2:36 am IST
பகிர்:

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மின்சார வாரிய ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரியில் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவா் சொக்கநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் தங்கராசன் வரவேற்றாா்.

கூட்டத்தில், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைத் தொகை, மாநில அரசு, வாரிய ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கான தொகையை உடனே வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

அரசால் ஊழியா்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படி 1.1.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில, மத்திய அரசை கேட்டுக்கொள்வது, மறைந்த முதல்வா் ஜெயலலிதா, தனது பதவி காலத்தில் 60 வயது நிறைவு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பேருந்து இலவச அனுமதி வழங்குவதாக கூறியிருந்தாா்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments