முகப்பு
கிருஷ்ணகிரி

இரு சக்கர வாகனம்- காா் மோதல்:

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்ட விபத்தில், சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:12 am IST
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்ட விபத்தில், சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மல்லூரிலிருந்து ஓரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் மேல்மருவத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். காரை மல்லூரைச் சோ்ந்த நாகேஷ் (35) என்பவா் ஒட்டிச் சென்றாா். அந்தக் காா், கிருஷ்ணகிரியைக் கடந்து, தேசிய நெடுஞ்சாலையில் ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரப்பம், காமராஜ் காலனியைச் சோ்ந்த கம்பி கட்டும் தொழிலாளி முருகன் (27), அவரது அண்ணன் மகன் சக்தி (15) ஆகிய இருவா் பலத்த காயம் அடைந்தனா். இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சக்தியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.