பிப்ரவரி மாத கார் விற்பனை 25.71% குறைவு
சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் கார்களின் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 25.71% குறைந்துள்ளது.
சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் கார்களின் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 25.71% குறைந்துள்ளது.
2012ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் 2,13,362 கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1,58,513 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுபேக்சர்ஸ் (எஸ்ஐஏஎம்) இன்று வெளியிட்ட அறிக்கையில், மோட்டார் சைக்கிள்களின் விற்பனையும் கடந்த மாதம் 4.48% சரிவை அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரியில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை சரிவை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement