முகப்பு
தற்போதைய செய்திகள்

இடி தாக்கி 4 ஆடுகள் பலி

மேட்டூர் அச்சன்காடு பகுதி அருகே உள்ள கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில்  தோட்டத்தில் தென்னை மரம் அருகே பட்டி

Updated On : 11 மே 2013, 4:05 pm IST
பகிர்:

மேட்டூர் அச்சன்காடு பகுதி அருகே உள்ள கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில்  தோட்டத்தில் தென்னை மரம் அருகே பட்டி அமைத்து கட்டி இருந்தார்.

இந்நிலையில் நேற்று இடி மின்னலுடன் மேட்டூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்தது. அப்போது திடீரென கண்ணையன் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியது. இதில் தென்னை மரத்தின் அருகே கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் இறந்தன. மேலும் இடிதாக்கும் போது கண்ணையன் தோட்டத்தின் அருகே நின்றதால் அவரது கை உணர்வு அற்ற நிலையில் இருந்தது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.