பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது
இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு ரகசிய தகவல்களை கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக சேகரித்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பார்மர் மாவட்டம் மதாரி கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் கான் (45)
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு ரகசிய தகவல்களை கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக சேகரித்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பார்மர் மாவட்டம் மதாரி கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் கான் (45) என்பவர் நேற்று(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேல் விசாரணைக்காக ரோஷன் கான் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.