முகப்பு
தற்போதைய செய்திகள்

மாற்றம் காண அனைவரும் வாக்களியுங்கள் : மலாலா கோரிக்கை

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா லண்டனில் இருந்து தெரிவித்துள்ளார்.

Updated On : 11 மே 2013, 3:31 pm IST
பகிர்:

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா லண்டனில் இருந்து தெரிவித்துள்ளார்.

தாலிபான்களால் சுடப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தற்போது லண்டனில் படித்து வரும் சிறுமி மலாலா, பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில், நமது வாக்குகளின் சக்தியை நாம் ஒரு போதும் உணர்ந்ததில்லை. ஒரு ஓட்டு நமது எதிர்காலத்தை மாற்றிவிடும். நமது நாட்டுக்காக வாக்களிப்போம். நமது தாய் நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை நமது வாக்குகளே தீர்மானிக்கும். அனைத்து பெண்களும் முன்வந்து வாக்களிக்க செல்ல வேண்டும். நிச்சயம் ஒரு நாள் மாற்றம் வரும் என்று தெரிவித்துள்ளார் மலாலா.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.