முகப்பு
தற்போதைய செய்திகள்

மிக்-29 கே ரக போர் விமானங்கள் இந்தியக் கடற்படையில் இணைப்பு

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் ஐ.என்.எஸ். ஹன்சா என்ற இந்தியக் கடற்படைத் தளம் உள்ளது. இது கருஞ்சிறுத்தை படையணி உள்ளிட்ட இந்தியக் கடற்படையின் பல்வேறு போர் விமானப் படையணிகளின் தளமாகும். இந்தப் படைத் தளத்தில் மிக்-29 கே ரக போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.

Updated On : 11 மே 2013, 4:00 pm IST
பகிர்:

மிக்-29 கே ரக போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி இன்று முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்தார்.

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் ஐ.என்.எஸ். ஹன்சா என்ற இந்தியக் கடற்படைத் தளம் உள்ளது. இது கருஞ்சிறுத்தை படையணி உள்ளிட்ட இந்தியக் கடற்படையின் பல்வேறு போர் விமானப் படையணிகளின் தளமாகும். இந்தப் படைத் தளத்தில் மிக்-29 கே ரக போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி சனிக்கிழமை முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்தார். இந்த விழாவில், மிக்-29 கே ரக விமானங்கள் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டன. அவற்றுக்குத் துணையாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் சீ ஹாரியர்ஸ் ரக போர் விமானங்களும் பறந்தன.

விழாவில் ஏ.கே.அந்தோனி பேசுகையில், ""மிக்-29 கே விமானங்கள் இணைக்கப்பட்டதால் இந்தியப் பாதுகாப்புத் தயார்நிலையும் போர்த் திறனும் மேம்படும். பல்வேறு திறன்களைப் பெற்றுள்ள இவை வானில் ஆதிக்கம் செலுத்தும்'' என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.