முகப்பு
தற்போதைய செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. 70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமையன்று

Updated On : 1 ஜூன், 2013 at 7:47 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா  சிகிச்சை முடிந்து இன்று (ஜூன் 1) வீடு திரும்பினார்.

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. 70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமையன்று (மே 31) மனோரமாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.இதைத் தொடர்ந்து இன்று மாலை மனோரமா வீடு திரும்பினார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.