முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் சீரமைப்பு

திண்டுக்கல் - தாமரைப்பாடி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது, நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களால் கண்டறியப்பட்டது.

Updated On : 1 ஜூன் 2013, 12:10 pm IST
பகிர்:

திண்டுக்கல் - தாமரைப்பாடி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது, நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவ்வழியாக வந்து கொண்டிருந்த கன்னியாக்குமரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் உட்பட பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பிறகு தற்காலிகமாக விரிசல் சரிசெய்யப்பட்டு, அப்பகுதியில் ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் ரயில்கள் மெதுவாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அனைத்து விரைவு ரயில்களும் கடந்து சென்ற பிறகு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இன்று காலை துரிதமாக நடைபெற்று முடிந்தது. பிறகு வழக்கம் போல அவ்வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் நேற்று இரவு முதல் அவ்வழியாகச் சென்ற விரைவு ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.