தீக்குளித்த மனைவி, காப்பாற்றச் சென்ற கணவர் இருவரும் சாவு
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் சித்திவினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதனின் மகன் ஜெயக்குமார் (41). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுமதி
திருவள்ளூர் அருகே குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த மனைவி, அவரை காப்பாற்றச் சென்ற கணவர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் சித்திவினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதனின் மகன் ஜெயக்குமார் (41). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுமதி (31). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சுமதியின் தம்பி திருமணத்துக்கு அவரது குடும்பத்தினர் பத்திரிகை அடித்துள்ளனர். அதில் ஜெயக்குமார்- சுமதி பெயரை சேர்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதையொட்டி ஜெயக்குமார் தனது மனைவி சுமதியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுமதி தனது தந்தை காளியப்பனிடம் கேட்டபோது அவரும் சுமதியை திட்டி துரத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சுமதி புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதைப் பார்த்த ஜெயக்குமார் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
Advertisement
Advertisement
அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை சுமதி இறந்தார். மாலையில் கணவர் ஜெயக்குமாரும் இறந்தார். இதுகுறித்து சுமதியின் தந்தை ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.