அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
திண்டுக்கல்லில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திண்டுக்கல்லில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாநில தலைவர் மா. ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் ரா. காசிப்பாண்டியன் போராட்டத்தை துவங்கிவைத்து பேசினார். அப்போது பள்ளிக் கல்வித்துறையில் 2015-16ம் ஆண்டில் 500 ஆசிரியர் பயிற்றுநர் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமானம் செய்ய வேண்டும்.
சென்னை உயர் நீதிமனற மதுரை கிளையின் தீர்ப்பின்படி 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்ய வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிகை வலியுறுத்தி 32 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.