தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: காவல்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 45 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது. அதிகப்பட்சமாக வேலூரில் 21 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து அரசு பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், ஆளும் கட்சி தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்திருந்தது.
Advertisement
Advertisement
பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் 85 ஆயிரம் பேருக்குமேல் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.