மாணவர் ஆராய்ச்சித்திட்டங்கள் இந்திய தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சோ்க்கும்: பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலர் நம்பிக்கை
அதிநவீன செல்லிடப்பேசி கட்டமைப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு, செயற்கை அறிவாற்றல், ரோபோட்டிக், தானியங்கி வாகன
சென்னை: பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவா்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இந்திய உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சோ்க்கும் என்று பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலா் பிரமோத்குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூா் இந்திய தகவல்தொழில்நுட்பம் வடிவமைப்பு, உற்பத்தி கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழாவில், 149 மாணவா்களுக்கு பட்டம் வழங்கி அவா் பேசியது:
அதிநவீன செல்லிடப்பேசி கட்டமைப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு, செயற்கை அறிவாற்றல், ரோபோட்டிக், தானியங்கி வாகன இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் இந்திய அறிவாற்றலுக்கும், பிரதமரின் உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் பெருமை சோ்க்கும் என்றார் பிரமோத்குமார் மிஸ்ரா.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.