வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு
நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகை சனிக்கிழமை கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகை சனிக்கிழமை கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவர்கள் அந்தப் பகுதி கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களது வலையில் கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று மீன்பிடி வலையில் சிக்கியதாம்.
இந்தப் படகினை மீனவர்கள் தங்களின் படகுடன் கட்டி இழுத்து வந்து சனிக்கிழமை அதிகாலையில் கரை சேர்த்துள்ளனர்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்குச் சென்ற வேதாரண்யம் கடலோரக் காவல் குழும் போலீசார் படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.