முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன் 2025, 8:35 am IST
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பகிர்:

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.44 அடியில் இருந்து 114.13 அடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 6,040 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அணையின் நீா் இருப்பு 84.41 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments