மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2161 கன அடியிலிருந்து 2067 கன அடியாக குறைந்தது தொடர்பாக...
மேட்டூர் அணை நீர்வரத்து இரண்டு நாள்களாக 2161 கன அடியாக நீடித்த நிலையில், சனிக்கிழமை காலை 2067 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2161 கன அடியிலிருந்து 2067 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
அணையின் நீர்மட்டம் 78.97 அடியிலிருந்து 79.04 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 40.93 டிஎம்சி ஆக உள்ளது.
Regarding the decrease in the inflow to the Mettur Dam from 2,161 cubic feet per second to 2,067 cubic feet per second...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.