முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை: வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் சுட்டுப்பிடிப்பு

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தது தொடர்பாக...

Updated On : 29 நவம்பர் 2025, 11:46 am IST
பகிர்:

கோவை: கோவை, கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை சனிக்கிழமை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளன. இங்கு அரசு அலுவலா்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு ‘ஏ’ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி (3) பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து வீடுகளின் உரிமையாளா்கள் அங்கு சென்றனா். கவுண்டம்பாளையம் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு சாதாரணமாக குடியிருப்புவாசி போன்று நடந்து வெளியே வரும் சிசிடிவி காட்சி.

இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் நில எடுப்புப் பிரிவு வருவாய் அலுவலரின் வீட்டில் மட்டும் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற வீடுகளில் மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு

இந்த நிலையில், கொள்ளையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 3 கொள்ளையர்கள் ஈடுபட்டதும், அவர்கள் குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொள்ளையர்கள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் ஆசிப்(48), இர்பான்(45), கல்லு (எ) கலீல்(60) மூன்று பேரும் தப்பிக்க முயன்றதை அடுத்து காவல்துறையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

3 பேரும் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கண்டறிப்பட்டதாகவும், காவல் துறையினரை பார்த்ததும் மூன்று பேரும் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி

கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக ஆட்டோவில் வந்து இறங்கியதும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு சாதாரணமாக குடியிருப்புவாசி போன்று நடந்து வெளியே வரும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

Coimbatore: 3 robbers from the northern state arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.