முகப்பு
தற்போதைய செய்திகள்

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

திமுக நடத்தும் கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 15 ஏப்ரல் 2026, 3:30 pm IST
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டையும், தென்னிந்திய மாநிலங்களையும் பாதிக்கும் வகையில், அந்த மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில், மத்திய பாஜக அரசு, அவசர கோலத்தில், தொகுதி மறுவரையறையை கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் நாளை (ஏப்.16) அவசர சட்டத் திருத்தத்தை செய்ய உள்ளது. அதற்கு எதிராக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போராட்டத்தை ஆதரித்து வரவேற்துடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தக் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்கும்.

Advertisement

Advertisement

அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஜனநாயக ரீதியிலான ,முறையான விவாதங்களை நடத்தி, எந்த மாநிலமும் பாதிக்காத வகையில், கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, நாடாளுமன்ற தொகுதி மறுவரைக்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, ஒன்றிய பாஜக அரசு தென்னிந்திய மாநிலங்களை வஞ்சிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை கடைபிடிக்கிறது.

மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகிறது.

நாளை கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் - தென் மாநிலங்களுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.

பெயரளவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகளை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, வட மாநிலங்களுக்கு, மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிப்பது அநீதியானதாகும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களுக்கு தண்டனையாக, இந்தத் தொகுதி மறுவரையறை அமையும்.

தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைவரும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடியை நாளை ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தக் கருப்புக்கொடி போராட்ட வேண்டுகோளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் .

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அனைவரும், பொதுமக்களும் தங்களது இல்லங்களிலும், பொது இடங்களிலும், மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை கருப்புக் கொடிகளை ஏற்ற வேண்டுமென என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

summary

The Communist Party of India will participate in the black-flag protest organized by the DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments