பென்னாகரம் அருகே பரபரப்பு... கோயில் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்!
பென்னாகரம் அருகே கோயில் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்த பகுதி மக்கள் சாலை மறியல் குறித்து...
பென்னாகரம்: பென்னாகரம் அருகே கோயில் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்த பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பென்னாகரம் அருகே மஞ்ச நாயக்கன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய கடமடை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருந்து கொம்பாடியூர் வழியாக வனப்பகுதியில் உள்ள ஒப்பலகுண்ட முனியப்பன், பொன்மான் முனியப்பன் கோயிலுக்கு செல்லக்கூடிய வழிப்பாதை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெரிய கடமடை பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், பெரும்பாலை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
Advertisement
Advertisement
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் கைது செய்வதற்காக வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி இழுத்து வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக கொண்டு வரப்பட்ட வாகனத்தை மக்கள் முற்றுகையிட்ட நிலையில், தொடர்ந்து பெரிய கடமடை பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகரித்து வருவது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சாலை மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பென்னாகரம் அருகே பெரிய கடமடை பகுதியில் கோயில் செல்லக்கூடிய வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் .
Near Pennagaram People suddenly block the road demanding the removal of encroachments on the temple route.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.