சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி உயர்நிலை கூட்டம்!
பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலை ஆலோசனை குறித்து...
அமெரிக்கா-இஸ்ரேஸ், ஈரான் போர் காரணமாக பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலை ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த பிப். 28 முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளில் நிலவும் தட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலைக் கூட்டம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
புது தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் தடையற்ற எரிபொருள் விநியோகம், நிலையான தளவாடங்கள் மற்றும் திறமையான விநியோகத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வேளாண்மை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜே.பி. நட்டா, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு, மின்சார அமைச்சர் மனோகர் லால் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
PM Narendra Modi today chaired a high-level meeting to review the situation in the petroleum, crude oil, gas, power, and fertiliser sectors amid the evolving West Asia situation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.