சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!
சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 40 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தது குறித்து...
சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 40 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேற்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பல உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
Advertisement
தகவலை அடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய போலீஸாா், சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 40 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அத்தியாவசிய உணவுப்பொருள்கள் சட்டத்தின்படி ஆய்வு நடத்தியபோது சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 40 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்துடன், இது தொடர்பாக நீலமேகம், குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
Two Arrested In Chennai For Hoarding LPG Cylinders
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.