அழிவு நிலைக்கு செல்லும் காங்கிரஸ்: டி.கே.எஸ். இளங்கோவன்
"காங்கிரஸை அழிவு" நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு செயலைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள் என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது...
சென்னை: "காங்கிரஸை அழிவு" நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு செயலைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிபந்தனைகளுடன் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது. இதற்கு திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
Advertisement
Advertisement
தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சிக்குள் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாகவும், அதில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். இதே அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி பிற மாநிலங்களிலும் கையாண்டதாகவும், அதன் விளைவாக தில்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் துடைத்து ஏறியப்பட்டுவிட்டது. இறுதியில் காங்கிரஸ் அனைத்திலும் தோல்வி அடைந்து வருகிறது. காங்கிரஸின் இத்தகைய உத்திகள், "காங்கிரஸை அழிவு" நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு செயலைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கைக்கு இன்னும் 10 இடங்களே தேவைப்படும் நிலையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி முன்னணி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கே தவெக-வுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகரை சந்திப்பதற்கு தவெக தலைவர் விஜய் நேரம் கோரியுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசியலில் அரங்கேறி வரும் சூழலுக்கு இடையே, தமிழ்நாட்டில் தவெக-வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது, காங்கிரஸை "முதுகில் குத்திய கட்சி" என்று திமுக கடும் விமரிசனம் செய்துள்ளது. இதன் காரணமாக 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்' பதற்றம் அதிகரித்துள்ளது.
Dravida Munnetra Kazhagam (DMK) leader TKS Elangovan on Wednesday slammed the Congress, amidst party's alliance rumours with Tamilaga Vettri Kazhagam in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.