ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சித்தாந்தப் போர்! - பாக். பாதுகாப்புப் படைகளின் தலைவர்
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆசிம் முனீர் பேச்சு...
இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற சண்டையானது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆசிம் முனீர் ஞாயிற்றுக்கிழமை(மே 10) தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்தாண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆபரேசன் சிந்தூர்’ ராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதற்கு பாகிஸ்தானும் எதிர்வினை தாக்குதல்களை நடத்தியது. 4 நாள்களாக நடைபெற்ற சண்டை அதன்பின் அமெரிக்கா தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவுக்கு எதிரான சண்டைக்கு ‘மார்க்கா-இ-ஹக்’ எனப் பெயரிடப்பட்டது. அதன் ஓராண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஆசிம் முனீர், “இரு நாடுகளுக்கும் அல்லது இரு ராணுவங்களுக்கும் இடையே நடைபெற்ற மார்க்கா-இ-ஹக் வழக்கமானதொரு போரே அல்ல. ஆனால், நிஜத்தில் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தீர்க்கமானதொரு போர் அது” என்று குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
Pakistan's Chief of Defence Forces Field Marshal Asim Munir on Sunday termed last year's conflict with India as a "battle between two ideologies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.