முகப்பு
செய்திகள்

பிரிங்கில்ஸ் எப்போதும் சிப்ஸ் இல்லை தெரியுமா?

பிரிங்கில்ஸ் என்று பெயரிடப்பட்ட தின்பண்டம் ஒருபோதும் சிப்ஸ் இல்லை என்பது பலருக்கும் தெரியாது..

Updated On : 23 ஜூன் 2026, 6:26 pm IST
எஃப்டிஏ
பகிர்:

இதுநாள்வரை பிரிங்கில்ஸ் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் என நினைத்து மக்கள் வாங்கி சாப்பிட்டு வந்த ஒன்று உளைக்கிழங்கும் இல்லை, சிப்ஸ்ஸும் இல்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எஃப்டிஏ ஏற்கனவே தெரிவித்திருக்கிறது.

உருளைக் கிழங்கை துண்டுகளாக்கி செய்யப்பட்டதுதான் சிப்ஸ் என்பதால், பிரிங்கில்ஸை சிப்ஸ் என வகைப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என எஃப்டிஏ உத்தரவிட்டதைத் தொடர்ந்து பல பலத்தாண்டுகளுக்கு முன்பே அதனை கிரிஸ்ப்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறது நிறுவனம்.

இதனால் என்ன மாறிவிடப் போகிறது? ஒன்றுமில்லை. அதுபோலவே, மக்கள் பலரும் தின்பண்டம் என்று நினைத்து சாப்பிடும் பல பொருள்கள் உணவே அல்ல என்பதும்தான் சோகம்.

Advertisement

Advertisement

இதுவரை மொறுமொறுவென வட்டமாக, இளம் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருந்தால் அவை சிப்ஸ் என்று கருதிவந்தோமல்லவா? ஆனால், இந்த வடிவங்களில் இருப்பதால் மட்டும் அதனை சிப்ஸ் என்று அழைக்கக் கூடாது என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பது, ஒரு முழு உருளைக் கிழங்கை மெல்லிய துண்டுகளாக மாற்றி, வறுத்து அதில் மசாலாக்களை சேர்த்து விற்பனை செய்வது.

பிரிங்கில்ஸ் என்பது இவ்வாறு இல்லாமல், சோளம், அரிசி, கோதுமை போன்ற பொருள்களுடன் உலர்த்தி பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு மாவால் தயாரிக்கப்படுகிறது.

எனவே, சாதாரண உருளைக்கிழங்குத் துண்டுகளிலிருந்து தயாரிக்கப்படாததால், இவற்றை அதிகாரப்பூர்வமாக சிப்ஸ் என வகைப்படுத்துவதற்கான தகுதியைப் பெறவில்லை. எனவே, 'கிரிஸ்ப்ஸ்' என்றே சந்தைப்படுத்தப்படுகிறது.

​​பிரிங்கில்ஸ் தயாரிப்பு நிறுவனம், தங்கள் தயாரிப்பை உலர்ந்த உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டால் மட்டுமே, அதை 'சிப்ஸ்' என்று முத்திரையிட முடியும் என எஃப்டிஏ கூறியதால், மாற்று வழியை சிந்தித்த நிறுவனம் கண்டுபிடித்தது கிரிஸ்ப்ஸ்.

பலரும், பிரிங்கில்ஸ் உருளைக்கிழங்கே இல்லை, பலமாவுப் பொருள்களின் தயாரிப்பு என்று கூறும் புகார்களை நிறுவனம் மறுத்துவிட்டது.

summary

Did you know that Pringles aren't actually chips?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments