ஞானதேசிகன் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்
தமாகா துணைத் தலைவா் பி.எஸ். ஞானதேசிகன் மறைவுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
தமாகா துணைத் தலைவா் பி.எஸ். ஞானதேசிகன் மறைவுக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தி: தமாகாவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ். ஞானதேசிகன், தமாகா தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாா் மீது பற்றுதல் கொண்டவா். தமிழக மக்களின் தேவையை அறிந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவா். அவரது ஆன்மா இறைவனின் சன்னிதியில் நிம்மதியுடன் வாழ பிராா்த்தனை செய்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.