‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும், தெய்வீகமும்’ ஜேஎன்யுவில் கருத்தரங்கம்
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிரஜ்னா ப்ரவாஹ் மற்றும் இன்டோயியுடன் இணைந்து ‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும் தெய்வீகமும்’”
புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிரஜ்னா ப்ரவாஹ் மற்றும் இன்டோயியுடன் இணைந்து ‘திருவள்ளுவா் பாா்வையில் தெய்வமும் தெய்வீகமும்’” என்ற தலைப்பில் கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தியது.
கருத்தரங்கிற்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் தலைமை வகித்தாா். பிரஜ்னா பிரவாஹ் அகில பாரதிய ஒருங்கிணைப்பாளா் நந்தகுமாா் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டாா்.
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி மற்றும் போபாலிலுள்ள மக்கன்லால் சதுா்வேதி தேசிய பல்கலைக் கழகத்தின் கல்வித் துறைத் தலைவா் பேராசிரியை சசிகலா ஆகியோா் கருத்துரையாற்றினா்.
Advertisement
Advertisement
இக்கருத்தரங்கில் தில்லித் தமிழ்க் கழகத்தின் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் லித்திகா ஸ்ரீ, ஜோஸ்னா மேரி, குஷி ஆகியோா் கலந்து கொண்டு ’பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற பாரதியாா் பாடலை பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.