முகப்பு
புதுதில்லி

போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

மேற்கு தில்லியில் இயங்கி வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 2 நைஜீரியா்கள் உள்பட 4 பேரை கைது செய்து, ரூ. 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:35 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:15 PM

மேற்கு தில்லியில் இயங்கி வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 2 நைஜீரியா்கள் உள்பட 4 பேரை கைது செய்து, ரூ. 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில் திலக் நகா் பகுதியில் ஏப். 6-ஆம் தேதி சோதனை நடைபெற்றது. இதில் குா்மீத் மற்றும் முகேஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் இருந்து 73 கிராம் போதைப் பொருள்கள், எடை இயந்திரங்கள், ரொக்கமாக ரூ.37,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குா்மீத் தலைமையில் இந்த போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றதும், முகேஷ் அதன் விநியோகத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

அவா்களிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், ஏப். 9-ஆம் தேதி நைஜீரியா நாட்டைச் சோ்ந்த மாந்கபோ டோவிட் 10 கிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டாா். மேலும், இமேகா இமானுவல் பின்னா் 7 கிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டாா்.

இமானுவல் ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் தொடா்புடைய மற்றவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.