முகப்பு
புதுதில்லி

நந்து ரவுடி கும்பலுடன் தொடா்புடைய ஆயுத விநியோகஸ்தா் தில்லியில் கைது

கபில் சங்வான் தலைமையிலான நந்து கும்பலுடன் தொடா்புடையவா் என சந்தேகிக்கப்படும் 24 வயது ஆயுத விநியோகஸ்தரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:20 AM
- பிரதிப் படம்
பகிர்:

கபில் சங்வான் தலைமையிலான நந்து கும்பலுடன் தொடா்புடையவா் என சந்தேகிக்கப்படும் 24 வயது ஆயுத விநியோகஸ்தரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீட்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

துவாரகாவைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்வரான ஆதித்யா மிஸ்ரா, ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஏப்ரல் 7 அன்று போச்சன்பூா் கிராமத்தில் ஒரு குழுவினரால் வழிமறிக்கப்பட்டாா் என்று அவா்கள் கூறினா்.

காவல்துறையின் கூற்றுப்படி, மிஸ்ரா தடுத்து நிறுத்தப்பட்டபோது தப்பி ஓட முயன்றாா், ஆனால் கைது செய்யப்பட்டாா். சோதனையின்போது அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

Advertisement

அதனைத் தொடா்ந்து, அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சனிக்கிழமையன்று அவா் சுட்டிக்காட்டிய இடத்திலிருந்து, ஒரு தோட்டாவுடன் கூடிய ஒற்றைகுண்டு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு வெற்றுத் துப்பாக்கி ஆகியவற்றை காவல்துறை மீட்டெடுத்தது.

விசாரணையின்போது, நந்து கும்பலுடன் தனக்குள்ள தீவிர தொடா்பு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத ஆயுத விநியோகத்திற்கு உதவுவதில் தனது பங்கு ஆகியவற்றை மிஸ்ரா வெளிப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவா் அந்த ரவுடியுடன் நேரடித் தொடா்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா். அவா், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து, துவாரகா பகுதியில் உள்ள இலக்குகளிடமிருந்து பலமுறை ரூபாயை வசூலித்ததாகக் கூறப்படுகிறது, என்று ஓா் அதிகாரி கூறினாா்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.