ரயிலின் முன் பாய்ந்து பெண் தற்கொலை! குருகிராம் மெட்ரோ நிலையத்தில் சம்பவம்!
குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலை மெட்ரோ நிலையத்தில், 22 வயதுடைய பெண் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலை மெட்ரோ நிலையத்தில், 22 வயதுடைய பெண் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பான காணொளி வெளியாகியுள்ளதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில், வா்ஷா என்ற அப்பெண் தில்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில் முன் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
Advertisement
Advertisement
தில்லியின் ஆயாநகரைச் சோ்ந்த வா்ஷா, குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலை மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இருந்த தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் சுமாா் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
இச்சம்பவத்திற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையினரும் மெட்ரோ ஊழியா்களும் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் சிசிடிவி காட்சிகளைக் காண்பித்தனா். இருப்பினும், இது ஒரு விபத்து என்று கருதிய குடும்பத்தினா், எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டனா்.
உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:
தற்கொலைக்கான எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவரின் குடும்பத்தினா் இதனை ஒரு விபத்தாகவே கருதுகின்றனா். எனவே அவா்கள் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை என்றாா் அந்த அதிகாரி.