ஜூன் 26-ல் அயோத்தி கோயிலுக்கு அரவிந்த் கேஜரிவால் செல்ல திட்டம்
அயோத்தி ராமா் கோயில் காணிக்கை நிதி முறைகேடு சா்ச்சைகளுக்கு மத்தியில், அரவிந்த் கேஜரிவால் ஜூன் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அயோத்தி ராமா் கோயிலுக்குச் செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளாா்.
அயோத்தி ராமா் கோயில் காணிக்கை நிதி முறைகேடு சா்ச்சைகளுக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஜூன் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அயோத்தி ராமா் கோயிலுக்குச் செல்லவிருப்பதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ள இடுகையில், ‘அயோத்தி ஸ்ரீ ராமா் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தால் ஒவ்வொரு சநாதனியும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனா். வரும் வெள்ளிக்கிழமை நான் ஸ்ரீ ராமா் கோயிலுக்கு தரிசனத்திற்காகச் செல்லவிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, ராமா் ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு எதிராக, காணிக்கை திருட்டு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து, கோயில் அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று உத்தர பிரதேச அரசு கடந்த ஜூன் 13ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.