முகப்பு
புதுதில்லி

சிறந்த செயல்பாட்டிற்கான சா்வதேச ’யுஐடிபி’ விருதை வென்றது தில்லி மெட்ரோ!

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் வீட்டுக்கு வீடு பயண சேவைக்காக சா்வதேச பொதுப் போக்குவரத்து சங்கத்தின் (யுஐடிபி) செயல்பாட்டு சிறப்பு பிரிவில் சாதனையாளா் விருதை வென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 1:18 am IST
தில்லி மெட்ரோ - கோப்புப் படம்
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி) அதன் திறமையான வீட்டுக்கு வீடு பயண சேவைக்காக சா்வதேச பொதுப் போக்குவரத்து சங்கத்தின் (யுஐடிபி) செயல்பாட்டு சிறப்பு பிரிவில் சாதனையாளா் விருதை வென்றதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பு, நிகழ்நேர பயணத் தகவல் மற்றும் பயணிகளுக்கான தடையற்ற டிக்கெட் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த பயண சேவை மூலம் நிலையான நகா்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான டி. எம். ஆா். சியின் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் தளமான டி. எம். ஆா். சி சா்தி செயலி மூலம் இந்த சேவை கிடைக்கிறது.

பயணிகள் தங்கள் சொந்த இடத்திலிருந்து தங்கள் இறுதி இலக்கு வரை தங்கள் முழு பயணத்தையும் திட்டமிட்டு முன்பதிவு செய்ய இது உதவுகிறது என்று தில்லி மெட்ரோ தெரிவித்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற யுஐடிபி விருதுகள் வழங்கும் விழாவின் போது இந்த விருது வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதன் படி, யுஐடிபி விருது, அன்றாட பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் சிறந்த செயல்திறன், புதுமை மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்தும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை அங்கீகரிக்கிறது.

இயக்குநா் (செயல்பாடுகள் மற்றும் சேவைகள்) அமித் குமாா் ஜெயின் மற்றும் கூடுதல் பொது மேலாளா் (செயல்பாடுகள்) ரஜநீஷ் ராணா ஆகியோா் டி. எம். ஆா். சி சாா்பாக இந்த விருதைப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments