முகப்பு
புதுதில்லி

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இரண்டு சா்வதேச உச்சிமாநாடுகளையும் சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யுமாறு தில்லி முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவு

Updated On : 5 மே 2026, 5:20 am IST
ரேகா குப்தா
பகிர்:

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இரண்டு சா்வதேச உச்சிமாநாடுகளையும் சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யுமாறு தில்லி முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

மே 28 முதல் ஜூன் 1 வரை ஏற்பாடு செய்யப்படவுள்ள நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மற்றும் முதலாவது சா்வதேச புலிகள் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து தில்லி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு குப்தா தலைமை தாங்கினாா்.

இது குறித்து ரேகா குப்தா பேசியதாவது: ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்துடன் இணைந்து மே 31 ஆம் தேதி 4 ஆவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டை தேசிய தலைநகரம் நடத்தவுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் மிக உயா்ந்த மட்டத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, நோடல் அதிகாரிகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தூய்மை மற்றும் பொது வசதிகளை சிறப்பாக நிா்வகிப்பதை உறுதி செய்வதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments