உணவு சரித்திரம்
உணவு சரித்திரம் - முகில்; பக்.304; ரூ.230; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17; )044 - 2432 2771.
உணவு சரித்திரம் - முகில்; பக்.304; ரூ.230; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17; )044 - 2432 2771.
மனிதன் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கிறானோ, இல்லையோ, உலகில் எங்கோ ஒரு மூலையில் உண்ணப்படும் உணவுப் பதார்த்தங்கள் தொலைதூரங்களுக்குக் கூட உலகம் முழுவதும் பரவிவிடுகின்றன. ஒரே உணவுப் பொருள், ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி வடிவங்களைப் பெற்று அந்த மக்களின் வாழ்க்கையோடு கலந்து விடுவதுதான் அதிசயம்.
இந்தியாவைப் பொருத்தவரை கற்காலம் தொட்டு, இன்றைய நவீன தொழில்நுட்ப காலம் வரை உணவுப் பொருள்கள் வகை வகையாகக் குவிந்த வண்ணம் உள்ளன. முகலாயர் ஆட்சியும், காலனியாதிக்கங்களும் புதுப்புது உணவுப் பழக்கங்களை நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுதான் அந்த ஆட்சிகளின் நன்மைகளில் முதன்மையானது என்பதை இந்த நூலைப் படித்ததும் உணர முடிகிறது.
Advertisement
Advertisement
உப்பு தொடங்கி வெற்றிலைப் பாக்கு வரை நம்மவர்களின் உணவில் இடம்பெற்றுள்ளவை ஏராளம். அவற்றின் வரலாற்றை 15 தலைப்புகளில் அறுசுவை குன்றாமல் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
ஓர் உணவுப் பொருளைச் சுற்றி பிணைக்கப்படும் வரலாறுகள், கதைகள், இலக்கியங்கள், பதார்த்தங்கள் என்று சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் வயிறு புடைக்கும் வண்ணம் பரிமாறியிருக்கிறார். நாம்தான் கொஞ்சம் பார்த்து அருந்த வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.