முகப்பு
நூல் அரங்கம்

கர்ணன் - காலத்தை வென்றவன்

கர்ணன் - காலத்தை வென்றவன்; மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த்; தமிழில் - நாகலட்சுமி சண்முகம்; பக்.862; ரூ.899; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், இரண்டாம் தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ், 42, மால்வியா நகர், போபால்-4260

Updated On : 23 மார்ச் 2020, 4:50 am IST
பகிர்:

கர்ணன் - காலத்தை வென்றவன்; மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த்; தமிழில் - நாகலட்சுமி சண்முகம்; பக்.862; ரூ.899; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், இரண்டாம் தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ், 42, மால்வியா நகர், போபால்-426003.   
மகாராஷ்டிர அரசின் விருது,  குஜராத் இலக்கிய அமைப்பின் விருது, ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம் இது. 
சூரிய பகவானுக்கும், குந்திக்கும் பிறந்த கர்ணனை குந்தி 
அசுவநதியில் போட்டுவிட, 
அதிரதன் என்னும் தேரோட்டி கர்ணனை அசுவநதியில் கண்டெடுத்து  தனது மகனாக வளர்த்தார். பிறந்த கணம் தொட்டு பாரதப் போரில் 
அர்ஜுனனால் கொல்லப்படும்  வரை கர்ணன் விதியின் பிடியில் எவ்வாறு அகப்பட்டிருந்தான் என்பதை இந்தநாவல் விரிவாக எடுத்துரைக்கிறது.
வில்வித்தை, மல்யுத்தம், குதிரையேற்றம் உள்ளிட்டவற்றில் சத்திரியர்களை விட மிகத் தேர்ந்தவனாக இருப்பினும்,  சூத புத்திரன் என அவனது குலத்தை முன்னிறுத்தி கர்ணன் பொதுவெளியில்  அவமானப்படுத்தப்படுகிறான். கர்ணனின் கையறுநிலையை துரியோதனன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தியது  முதலே கர்ணனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது எனலாம். 
கர்ணன் என்பவன் யார், அவன் ஏன் அதர்மத்தின்பால் இருக்க  வேண்டிய சூழல் ஏற்பட்டது, ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவனது மனவோட்டம் என்ன? குந்தி, துரியோதனன், கர்ணனின் மனைவி விருசாலி, துரோணரின் மகன் அசுவத்தாமன்,  கிருஷ்ணன் ஆகியோருக்கும்  கர்ணனுக்கும் இடையே நிகழ்ந்த 
பல்வேறு  நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த  நாவல் புனையப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments